News August 14, 2024
மூவண்ணக் கொடியில் மிளிரும் நாகூர் தர்கா மினாரா

நாட்டின் 78ஆவது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் பெரிய மினாரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. நாகூர் தர்கா நிர்வாகத்தின் சார்பாக தர்காவின் பெரிய மினாராவில் மூவர்ண நிறத்தில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, ஜொலித்து காணப்படுவதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர்.
Similar News
News January 3, 2026
நாகை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News January 3, 2026
நாகை: இலவச எம்பிராய்டரி பயிற்சி அறிவிப்பு

நாகை புதிய கடற்கரை சாலை ஐ.ஓ.பி. ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், 30 நாட்கள் இலவச எம்பிராய்டரி, பேப்ரிக் பெயிண்டிங், ஆரி ஒர்க் ,பிளவுஸ் டிசைனிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், நாகை மாவட்டத்தை சேர்ந்த 8-ம் வகுப்பிற்கு மேல் படித்த 50 வயதுகுட்பட்டவர்கள் 6374005365 / 9047710810 என்ற எண்ணில் முன்பதிவு செய்து பங்கேற்கலாம் என பயிற்சி மைய இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
News January 3, 2026
நாகை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜன.6-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.


