News January 25, 2025
மூத்த குடிமக்களுக்கு உபகரணம் வழங்கும் தேதி அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசின் Rastriya Vayosri Yojana (ராஸ்டிரிய வயோஸ்ரீ யோஜனா) திட்டத்தின்கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முத்த குடிமக்களுக்கு மடக்கும் விதமான சக்கர நாற்காலி சிறப்பு நடைபயிற்சி உபகரணம் வழங்கும் விழா தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பத்தூரில் 28ஆம் தேதி, நாட்றம்பள்ளியில் 29ஆம் தேதி, வாணியம்பாடியில் 30ஆம் தேதி, ஆம்பூரில் 31ஆம் தேதி வழங்கப்படும்.
Similar News
News November 10, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று (நவ.10) விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி “உங்களது வங்கிக் கணக்கிற்கு தவறுதலாக பணம் அனுப்பி விட்டதாகவும் அதை திருப்பி அனுப்புமாறும் வரும் செல்போன் அழைப்புகளை மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். பொதுமக்களும் இணையதள வாசிகளும் பாதுகாப்புடன் இணையதளத்தை பயன்படுத்தவும்”. இவ்வாறு காவல்துறை எச்சரித்துள்ளது.
News November 10, 2025
திருப்பத்தூரில் வாலிபால் போட்டி!

திருப்பத்தூர் மாவட்ட அளவில் 19 வயது பிரிவுக்கான வாலிபால் போட்டி வருகின்ற நவ.13 மற்றும் 14 ஆம் தேதி திருப்பத்தூர் YMCA பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியில் பல பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்காக பல்வேறு பரிசுகள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
News November 10, 2025
திருப்பத்தூர்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


