News March 28, 2025

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: ஒடிசா இளைஞர் கைது

image

கோவில்பாளையத்தில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஒடிசா இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவில்பாளையம் அண்ணா நகர் பகுதியில், பொன்னுத்தாய்(65) என்ற மூதாட்டிக்கு, அதே பகுதியில் கட்டட வேலை செய்து வந்த, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமீர் மாலிக்(23) என்பவர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை கோவில்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 12, 2025

கோவை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News December 12, 2025

கோவை: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<> eportal.incometax.gov.in <<>>என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News December 12, 2025

மேட்டுப்பாளையம் அருகே சோகம்!

image

கடலூர் மாவட்டம் தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன்(22). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஊழியர் போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து சென்ற போலீசார் பார்த்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!