News May 7, 2025

மூடாத போர்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

image

இந்திய உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறுகளில் சிறு குழந்தைகள் விழுவதால் ஏற்படும் அபாயகரமான விபத்துகளை தடுப்பதற்காக கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை களிமண், மணலால் மூட வேண்டும். மூடாத போர்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று புதுகை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News December 20, 2025

புதுகை: கல்வி உதவித்தொகை தேர்வுக்கான இலவச பயிற்சி

image

8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் ஜன.10-ந் தேதி தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் +2 வரை மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி ஆவூர் ஊர்ப்புற நூலகத்தில் வருகிற 27ம் தேதி நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பித்து பயன்பெறவும்.

News December 20, 2025

புதுகை: பெண்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம்!

image

புதுக்கோட்டை மாவட்ட பெண்களே சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 20, 2025

புதுக்கோட்டை: லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே தச்சம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் தச்சம்பட்டி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டி வருகிறார். இந்நிலையில், தச்சம்பட்டி ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் (57) என்பவரிடம் வீட்டு வரி ரசீது கேட்டதற்கு ரூ.3,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

error: Content is protected !!