News October 23, 2024
முழு கொள்ளளவை எட்டாததால் நீர் இருப்பு குறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் 381 ஏரிகள் உள்ளன. இதில், ஒரு ஏரி கூட முழு கொள்ளளவை எட்டாத நிலையில் உள்ளது. மொத்த ஏரிகளில் 11 ஏரிகள் 75 சதவீதமும், 93 ஏரிகள் 50 சதவீதமும், 275 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவான நீர் இருப்பை கொண்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழைக்காலம் தொடங்கியுள்ளதால், நீர் இருப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Similar News
News November 15, 2025
காஞ்சி: உங்களிடம் பைக், கார் உள்ளதா?

காஞ்சிபுரம் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News November 15, 2025
ஸ்ரீபெரும்புதூர்: ஓடும் பேருந்தில் துணிகரம்!

ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் நர்மதா (31). இடியாப்ப வியாபாரம் செய்து வருகிறார். இவர், தனது கணவருடன் சொந்த ஊரான சிவகங்கை சென்று விட்டு நேற்று முன்தினம் ஆம்னி பஸ்சில் கோயம்பேடு வந்தபோது, கையில் வைத்திருந்த பையில், ரூ.14,000 & வெள்ளியிலான கைசங்கிலி திருடுபோய் இருப்பது தெரிந்தது. போலீசார் விசாரித்ததில், முன் இருக்கையில் இருந்த சிங்காரம் (60) திருடியது தெரியவந்தது. போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
News November 15, 2025
காஞ்சி: நடத்துநரை பேருந்தில் இருந்து தள்ளிய மாணவர்கள்!

காஞ்சி, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பூசாமி MTC நடத்துநர். இவர், அகரம் -தாம்பரம் பேருந்தில், நடத்துநராக உள்ளார். ஆதிநகர் அருகே வந்தபோது, பள்ளி மாணவர்கள் சிலர், பேருந்து படிக்கட்டு & ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கியபடி பயணம் செய்ததை பார்த்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியவுடன், பூசாமி மாணவர்களிடம் பேச, அவர்கள் இவரை பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


