News August 9, 2024
முள்ளங்குடி ஊராட்சி தலைவருக்கு தேசிய விருது

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் முள்ளங்குடி ஊராட்சிக்கு, ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் சுகாதார பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருது மந்திரி எஸ்.பி. சிங் பாகல் வழங்கினார்.
Similar News
News December 9, 2025
தஞ்சாவூரில் 30 பேர் கைது

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கும் வரை காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பாபநாசத்தில் இருந்து சென்னைக்கு பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் வேனில் புறப்பட தயாராக இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீசார் தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
News December 9, 2025
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு..

தஞ்சாவூர் மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் <
News December 9, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் வடச்சேரி, ஈச்சங்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(டிச.10) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் வடச்சேரி, திருமங்கலக்கோட்டை, ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


