News August 24, 2024
முருகன் மாநாடு குத்துவிளக்கு ஏற்றிய அமைச்சர்!

திண்டுக்கல், பழனியில் இன்று நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு நிகழ்ச்சியைக் காண பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என மாவட்ட ஆட்சியர் வைத்துள்ளார். இந்நிலையில் பழனியில் இன்று நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
Similar News
News January 9, 2026
திண்டுக்கல்: IOCL-லில் 394 பணியிடங்கள்!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தற்போது காலியாகவுள்ள 394 Junior Engineering Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு Diploma, Engineering,B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ. 25,000 முதல் ரூ. 1,05,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். https://iocl.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை ஷேர் பண்ணுங்க!
News January 9, 2026
திண்டுக்கல் பிரபலம் காலமானார்!

சத்திரப்பட்டியைச் சேர்ந்த முதுபெரும் காந்தியவாதி மா. வன்னிக்காளை (வயது 90+) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். காந்தியக் கொள்கைகளைப் பரப்பி வந்த இவரது சேவையைப் பாராட்டி கடந்த 2024-ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு ‘சிறந்த காந்தியவாதி’ விருது வழங்கி கௌரவித்தது. அவரது மறைவையொட்டி, சத்திரப்பட்டியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News January 9, 2026
திண்டுக்கல்: தொழிலாளி ஆற்றில் மூழ்கி மரணம்!

சோழவந்தானைச் சேர்ந்த தொழிலாளி செல்லப்பாண்டி (35). குடும்பத் தகராறு காரணமாக மனைவியிடம் கோபித்துக்கொண்டு, தனது இரண்டு மகன்களுடன் திண்டுக்கல் குண்டலபட்டியில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில், அணைப்பட்டி அருகே உள்ள முல்லைப் பெரியாறு வாய்க்காலில் குளித்தபோது, எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து விளாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


