News August 17, 2024
முரசொலிமாறன் பிறந்தநாள்: திமுகவினர் மரியாதை

மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலிமாறன் 91வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் பிறந்த நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அவரின் உருவபடத்திற்கு திமுக மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Similar News
News October 23, 2025
புதுச்சேரி: டிகிரி போதும்..வங்கியில் வேலை!

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள 50 மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: வங்கி வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.64,000-ரூ.1,20,940
4. வயது வரம்பு: 25-32
5. கடைசி தேதி : 30.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!
News October 23, 2025
புதுச்சேரி: தாவரவியல் பூங்கா நாளை திறப்பு

புதுச்சேரியின் சுற்றுலா தலங்களில் முக்கியமானதாக விளங்கும் தாவரவியல் பூங்கா மறைமலை அடிகள் சாலையில் அமைந்துள்ளது. சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் 3500 மரங்களுடன் கூடிய தாவரவியல் பூங்கா ஸ்மார்ட் திட்டத்தின் மூலம் ரூ.9.11 கோடி செலவில் புனரமைக்கும் பணிகள் 2023ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் நாளை வெள்ளிக்கிழமை முதல் அமைச்சர் ரங்கசாமி பூங்காவை திறந்து வைக்கிறார்.
News October 23, 2025
புதுச்சேரியில் தீபாவளி மதுபான விற்பனை சரிவு

புதுவையில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனை அதிகளவில் நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை 5 முதல் 10 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மதுபான விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு கடந்த 3 மாதம் முன்பு அரசின் வருவாயை உயர்த்த மதுபானங்களின் வரியை உயர்த்தியதே காரணம் என கூறப்படுகிறது.


