News March 25, 2025
மும்பை-குமரி இடையே சிறப்பு ரயில் சேவை

மும்பை-குமரி இடையே புதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. முதல் முறையாக, இந்த ரயில் கரூர், திருச்சி வழியாக இயக்கப்படுகிறது.
வஎ. 01005/01006 ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 25 வரை புதன் கிழமைகளில் இயக்கப்படுகிறது.
மும்பையிலிருந்து
செவ்வாய் இரவு 12:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறு மார்க்கத்தில் குமரியிலிருந்து
வியாழன் மாலை 4:45 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ரயில் பயணிகளுக்கு பகிரவும்
Similar News
News September 15, 2025
குமரியில் 10 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து

திக்கணங்கோடு சந்திப்பில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் 79 வழியோர கடலோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் மாற்றியமைக்க வேண்டியுள்ளதால் அந்த குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம்,முட்டம், மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News September 15, 2025
குமரி: குழந்தையை கொன்ற தாய்

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள சம்பக்குளத்தில் கடந்த 11-ம் தேதி பச்சிளம் குழந்தை சடலமாக தலை இல்லாமல் மிதந்து வந்த வழக்கில், பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூர தாயான ஈத்தாமொழி புதூர் பகுதியை சேர்ந்த ரேகா (38) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். வாலிபருடன் ஏற்பட்ட கள்ளக்காதலில் பிறந்ததால் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது அம்பலமானது.
News September 15, 2025
குமரியில் ரப்பர் விலை சரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 50ஆயிரம் ஏக்கர் பரப்பில் ரப்பர் சாகுபடி செய்யபட்டு வருகிறது. இந்த ஆண்டு கிலோ 200 ரூபாய்க்கு மேல் ரப்பர் விலை உயர்ந்திருந்தது. இந்நிலையில் ரப்பர் விலை மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் கிலோ 4 ரூபாய் வரை ரப்பர் விலை குறைந்துள்ளது. இது ரப்பர் விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது