News August 7, 2024

முன்பதிவு இல்லா பயண சீட்டு விற்பனை அதிகரிப்பு

image

மொபைல் போன் முன்பதிவு இல்லா பயண சீட்டுகள் விற்பனை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாதத்திற்கு சுமார் 26,978 பயணிகள் மொபைல் போன் பயணிச்சீட்டுகள் மூலம் பயணம் செய்த நிலையில்  அது கடந்த ஜூலையில் 68,631 ஆக உயர்ந்துள்ளது. இச்சாதனையை எட்ட காரணமாக இருந்த ஊழியர்களை மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் கணேஷ் ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்.

Similar News

News December 23, 2025

மதுரை: லாரி பின் சக்கரத்தில் சிக்கி கொடூர பலி

image

கருங்காலக்குடி அருகே கச்சிராயன்பட்டியை சேர்ந்தவர் வீரணன்(70). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு மேலூர் மதுரை நான்கு வழிச்சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்த போது அம்பலகாரன்பட்டி பஸ் ஸ்டாப் எதிரே, பின்னால் வந்த லாரி மோதியது. இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News December 22, 2025

மதுரை: பிரேக் அடித்த லாரி; டூவிலரில் வந்த இளைஞர் பலி

image

வாடிப்பட்டி நீரேத்தானை சேர்ந்த தேசிகன்(19). கன்னியாகுமரியை சேர்ந்த சானியா(19) என்பவரை டூவீலரில் அழைத்து கொண்டு மதுரை – திண்டுக்கல் சாலையில், டூவீலரில் நேற்று சென்றார். அப்போது மேம்பாலத்தில் முன்னே சென்ற லாரி திடீரென பிரேக் போட, பின்னால் சென்று டூவீலர் அதில் மோதியது. இதில் தேசிகன் சம்பவ இடத்திலே பலியாக, சானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 22, 2025

காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

image

திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்ற கோரிய விவகாரம் நிலுவையில் உள்ள நிலையில் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல கடந்த 20 நாட்களாக போலீசார் அனுமதி மறுத்த நிலையில் இன்று (டிச.22) மாவட்ட நிர்வாகம் தரிசனத்திற்கு செல்ல அனுமதித்துள்ளது. காலை 6 முதல் மாலை 6 மணி வரை கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியும், வீடியோ, புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!