News September 13, 2024
முன்னோடி விதை உற்பத்தி நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் மலை காய்கறிகள் மற்றும் மலை பயிர்களுக்கு விதை உற்பத்தி செய்யும் முன்னோடி நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் சுந்தர வடிவேல் தோட்டக்கலை இயக்குனர் (பொறுப்பு) அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 28, 2025
நீலகிரியில் அதிர்ச்சியில் மக்கள்: 3 இடங்களில் கூண்டு!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, முதுமலை மசினகுடி வனக்கோட்டம் மாவனல்லை பகுதியில் கடந்த 24ஆம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்த நாகியம்மாள் (60) என்பவரை புலி தாக்கி கொன்ற சம்பவம் மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 3 இடங்களில் கூண்டு வைத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
News November 28, 2025
நீலகிரி: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

நீலகிரியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News November 28, 2025
நீலகிரி: வாட்ஸ் ஆப் இருக்கா? சூப்பர் தகவல்

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


