News October 23, 2024

முன்னெச்சரிக்கையாக 48,664 மர கிளைகள் அகற்றம் – மாநகராட்சி

image

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஜூலை முதல் அக்டோபர் 19 வரை சென்னையில் 2,708 மரங்களின் 48,664 கிளைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Similar News

News October 17, 2025

சென்னை: இனி What’s App-லயே எல்லாம்! SUPER NEWS

image

சென்னை வாசிகளே அரசு சேவைகளை பெற சென்னை மாநகராட்சி சூப்பர் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சொத்து வரி, தொழில் வரி, இருப்பிட சான்று, பிறப்பு சான்று, இறப்பு சான்று, குடிநீர் இணைப்பு, நீச்சல் குளம் முன்பதிவு, செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவு போன்ற 35 சேவைகளை What’s Appலயே பெறலாம். இதற்கு ‘9445061913’ என்ற எண்ணுக்கு ‘Hi” னு SMS பண்ணுங்க. பின் மாநகராட்சியின் சேவைகளை அதில் பெற்றுக்கொள்ளலாம். (SHARE)

News October 17, 2025

சென்னை: துணை ஜனாதிபதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

image

சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக எஸ்டேட் போலீசாருக்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டதில், மிரட்டல் புரளி என உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர் ஒரு வருடமாக போயஸ் கார்டனில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் தங்கி வருகிறார்.

News October 17, 2025

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்-DON’T MISS IT!

image

சென்னை, தமிழக அரசின், ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், தரமணியில் உள்ள சி.ஐ.டி., வளாகத்தில் நாளை (அக்.18) நடைபெற உள்ளது. இந்த முகாமில் BE, கலை & அறிவியல், டிப்ளமோ, ஐடிஐ, பார்மசி படித்து முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் சென்று பதிவு செய்துகொள்ளுங்கள். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!