News April 15, 2025

முன்னீர்ப்பள்ளம் அருகே ஆட்டோ மோதி மூதாட்டி பலி

image

தருவை பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் மீது நேற்று (ஏப்-14) ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என முன்னீர்ப்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 19, 2025

திருநெல்வேலியில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்

image

▶️மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி
▶️களக்காடு முண்டந்துறை சரணாலயம்
▶️பாபநாசம் அகஸ்தியர் அருவி
▶️மாஞ்சோலை
▶️நெல்லை வனவிலங்கு சரணாலயம்
▶️காரையார் அணை
▶️நெல்லையப்பர் கோயில்
▶️பனதீர்த்தம் அருவி

News April 19, 2025

நெல்லையில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

image

திருநெல்வேலியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் ஜூனியர் சாப்ட்வேர் டெவலப்பர் பிரிவில் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து ஜூன்.30 க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 19, 2025

இன்ஸ்டாவில் பிரச்சனை ஏற்படும் விதமாக பதிவிட்ட 4 பேர் கைது

image

மானூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட எட்டான்குளம், தெற்கு தெருவை சேர்ந்த கோகுல்(24), முத்து(20), சுடலைமுத்து(18), அந்தோணி ராஜ் (23) ஆகிய 4 பேரும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ மற்றும் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் புகைப்படத்தை பதிவு செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் இன்று 4 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!