News April 23, 2025
முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க கடன் பெற விண்ணப்பிக்கலாம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் முதலமைச்சர் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் இம்மாதம் 30 ஆம் தேதி அதற்கான கடைசி நாள் என்றும் அவர் கூறியுள்ளார். அவர்கள் தொழில் செய்ய 30 சதவீத மூலதன மானியமும் 3 சதவீத பட்டி மானியமும் இதன் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Similar News
News February 23, 2026
குமரி : சிலிண்டர் புக் பண்ண இனி MISSED CALL…!

குமரி மக்களே, (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போது கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க.
News February 23, 2026
குமரியில் 2 ட்ரோன்கள் பறக்க தடை – ஆட்சியர் அறிவிப்பு

குமரி ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு – தமிழக முதல்வர் குமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் 24.02.2026 மற்றும் 25.02.2026 ஆகிய நாட்களில் குமரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கன்னியாகுமரி மாவட்டத்தில் ட்ரோன்கள் & இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
News February 23, 2026
வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் ஆட்சியர் அறிவிப்பு

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் இன்று 23.02.2026 தொடங்குகிறது. இந்த முகாம் 28.02.2026 தேதி வரை அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், துணை சுகாதார நிலையங்களிலும் வைத்து நடைபெறும். 6 மாதம் முதல் 11 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு நடைபெறுகிறது என்று குமரி ஆட்சியர் அழகு மீனா தெரித்துள்ளார்.


