News March 26, 2025
முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க அழைப்பு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. கிருஸ்துராஜ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் ராணுவவீரர்கள் தொழில் தொடங்க முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் ரூ.1/-.கோடிவரை கடனுதவி வழங்கப்படும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தளம் 5 இல் செயல்படும் அலுவலகத்திலும் 0421-2971127 என்ற எண்ணிலும் தகவல் பெறலாம்.
Similar News
News July 11, 2025
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய ஒரு வாய்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நாளை (ஜூலை.12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாவிலும் நடைபெற உள்ளது. இதில், ரேஷன் கார்டில் பெயர், முகவரி, போன் நம்பர், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். திருப்பூர் மக்களே, மிஸ் பண்ணிடாதீங்க SHARE பண்ணுங்க.
News July 11, 2025
திருப்பூர்: நடிகர் சிவா பேட்டி

பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் அமைந்துள்ள அருணோதயா தியேட்டரில் பறந்து போ படம் திரையிடப்பட்டது. இந்தநிலையில் ரசிகர்களிடம் திரைப்படத்தின் கருத்துக்களை கேட்க நடிகர் சிவா அங்கு வந்தார். மேலும் திரைப்படத்தை பார்த்த பொதுமக்களிடம் திரைப்படம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர் கூறுகையில், உலக அரசியலில் தான் ஈடுபடப் போவதாகவும், நானே அகில உலக சூப்பர் ஸ்டார் என்றும் நகைச்சுவையாக அவர் தெரிவித்தார்.
News July 10, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 10.07.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், பல்லடம், உடுமலை, அவிநாசி பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம், மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.