News April 24, 2025
முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம்

கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழைகம் விரைவில் அமைக்கப்படும் என சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் அவரது பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும், கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் கருணாநிதி எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 24, 2025
தஞ்சையில் வேலை வாய்ப்பு முகாம்

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை 25ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் இதில் கலந்துகொண்டு பயனடையுங்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
News April 24, 2025
தஞ்சை அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News April 24, 2025
தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது

ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி – கற்பகசுந்தரி தம்பதியினர். கணவருடனான தகராறின் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கற்பகசுந்தரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ராமமூர்த்தி தான் அடித்து கொன்றுள்ளார் என உறவினர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை உறுதி செய்த காவல்துறை தற்கொலைக்கு தூண்டியதாக ராமமூர்த்தியை கைது செய்தனர்.