News September 27, 2024
முன்னாள் படை வீரர்கள் சுயதொழில் தொடங் ஆட்சியர் அழைப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சுயதொழில் தொடங்கிட ஆர்வமுள்ள முன்னாள் படைவீரர்கள் (ம) படைப்பணியின் போது உயிரிழந்த படை வீரர்களின் கைம்பெண்களுக்கு வங்கிகள் மூலம் மானியத்துடன் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வசதி செய்து தரப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 22, 2025
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அதிகாரி நியமனம்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் 12 மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அதிகாரியாக தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (சென்னை) அதிகாரியான எச்.கிருஷ்ணனுன்னி நியமிக்கப்பட்டு உள்ளார்.
News October 22, 2025
தஞ்சை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (அக்.21) இரவு 10 மணி முதல் இன்று (அக்.22) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News October 21, 2025
BREAKING: தஞ்சாவூர் நாளை விடுமுறை அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.