News March 25, 2025
முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

புதுகை மாவட்ட முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (மார்ச்.26) காலை 10 மணிக்கு பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் CEMONC கூட்ட அறையில் நடைபெற உள்ளது. இதில் புதுகை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், விதவைகள், படை வீரர்களை சான்றோர், மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
புதுகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

புதுகை மாவட்டம் திருமயம் வட்டாரம் லெம்பலக் குடியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சேவை முகாம், நாளை (22.11.2025) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் ரத்த அழுத்தம், இருதய செயல்பாடு, கிட்னி செயல்பாடு, உள்ளிட்ட 48 நோய்களுக்கு பரிசோதனை செய்து கொள்ளலாம் இவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
News November 21, 2025
புதுகைக்கு மாநில பாஜக தலைவர் வருகை

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புதுக்கோட்டைக்கு 26ஆம் தேதி வருகை தருவதை முன்னிட்டு, ஆயத்த கூட்டம் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏவிசிசி கணேசன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் சார்பு அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.
News November 21, 2025
புதுகை: தொடர்ந்து வெளுத்து வாங்க போகும் மழை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நவ.22-ம் தேதி (இன்று) முதல் நவ.26-ம் தேதி (புதன்கிழமை) வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


