News January 2, 2025

முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு திறன் பயிற்சி

image

தேனி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் சார்ந்தோருக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பற்ற பதினாறு முதல் 36 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வாயிலாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. முன்னாள் படை வீரர்கள் மகன் மற்றும் மகள் கல்விச் சான்றிதழ் ஆவணங்களுடன் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் விருப்பங்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தகவல்.

Similar News

News December 4, 2025

புத்தகத் திருவிழா லோகோ வடிவமைத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு

image

தேனி மாவட்டத்தில் 4வது புத்தக திருவிழா விரைவில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து புத்தக திருவிழாவிற்கான இலட்சினையை (LOGO) கருத்துகளுடன் சிறந்த முறையில் வடிவமைத்து அனுப்பும் நபருக்கு ரூ.10,000‌ பரிசுத்தொகை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தயார் செய்த இலச்சினையை thenipro@gmail.com என்ற இணைய தள முகவரிக்கு நாளைக்குள் (05.12.2025) அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

News December 4, 2025

தேனி: வாக்காளர் பட்டியலில் 1.30 லட்சம் பேர் நீக்கமா?

image

தேனி மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் 11.30 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். நேற்று வரை இவர்களில் 11.27 லட்சம் பேருக்கு சிறப்பு திருத்த படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 9.67 லட்சம் படிவங்கள் பூர்த்தி செய்து பி.எல்.ஓ.,க்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 1.30 லட்சம் பேர் முகவரியில் வசிக்காதவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.

News December 4, 2025

தேனி: 10th தகுதி., மத்திய அரசில் 25487 காலியிடங்கள்!

image

தேனி மக்களே, மத்திய அரசின் 25487 Constable (GD) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிரம்பிய 10வது தேர்ச்சி பெற்றவர்கள் டிச 31க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். மத்திய அரசின் அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!