News March 15, 2025
முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்

கோவை கலெக்டர் பவன் குமார் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைகேட்பு முகாம் மற்றும் சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கு கூட்டம் வரும் மார்ச்.20 ஆம் தேதி கலெக்டர் பவன் குமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமினை பயன்படுத்தி பயன்பெற அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News March 15, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (15.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 15, 2025
அரசாணையை திரும்பப்பெற்றது தமிழக அரசு!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில் உண்டியல் காணிக்கையில் இருந்து, ஊட்டியில் ரிசார்ட் கட்டுவதற்கான, அரசாணை ஒன்றினை, தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு தொடர்ந்த நிலையில், அந்த அரசாணை வாபஸ் பெற்றது தமிழக அரசு. மேலும், கோவில் நலனுக்கு மட்டுமே செலவிட வேண்டுமென உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
News March 15, 2025
மெட்ரோ ரயில் சேவை: மக்கள் மகிழ்ச்சி

சட்டசபையில் நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கோவை மாநகரில் அவினாசி சாலை – சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் ரூ.10.740 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கை மத்திய அரசின் மூலதன பங்களிப்பு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணி தொடங்கப்படும் என்றார். இந்த அறிவிப்பால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.