News May 17, 2024

முன்னாள் கவுன்சிலர் மகன் கைது!

image

தலைவாசல் அருகே புனல் வாசலை சேர்ந்தவர் துரைராஜ். இவர் நேற்று முன்தினம் அம்மம்பாளையத்தில் இருந்து, ஆத்தூருக்கு பைக்கில் வந்துள்ளார். அப்போது விநாயகபுரத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பெருமாள், அவரது மகன் அரவிந்த் ஆகியோர் பைக்கில் வந்து தகராறு செய்து, ஜாதி பெயரை கூறி தாக்கியுள்ளனர். துரைராஜ் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து நேற்று அரவிந்தை கைது செய்தனர். பெருமாளை தேடி வருகின்றனர்.

Similar News

News December 13, 2025

சேலம் ரவுடி மனைவி எடுத்த விபரீத முடிவு!

image

சேலம், அழகாபுரம் மிட்டாபுதுார் கான்வென்ட் சாலையை சேர்ந்த, ரவுடி அஜித்குமார். இவரது மனைவி சவுமியா (30). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த அஜித்குமார், மனைவியிடையே தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சவுமியா தற்கொலை செய்து கொண்டார். அழகாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

News December 13, 2025

ஆத்தூர் அருகே ஷாக் கொடுத்த அதிகாரிகள்!

image

ஆத்தூர்:கெங்கவல்லி சுவேத நதி – நடுவலூர் ஏரி நீர்வழி வாய்க்காலை ஆக்கிரமித்துக் 30 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இவர்களுக்கு செப். 12 அன்று ஓதியத்தூரில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டு டிச.8க்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிகாரிகள் அறிவுறித்தினர். இந்தநிலையில் கூடுதல் அவகாசம் கேட்ட 6 பேரின் வீடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த மின் இணைப்புகளை துண்டித்த அதிகாரிகள் உடனடியாக காலிசெய்ய உத்தரவிட்டனர்.

News December 13, 2025

சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்!

image

சேலம் புதிய பேருந்து நிலையம் அடுத்துள்ள மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் காம்பவுண்ட் சுவரில் திமுக இளைஞரணியின் மாவட்ட துணை அமைப்பாளர் சி.எம்.எஸ். மசூது என்பவரின் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் “எந்த ஷா வந்தாலும், தமிழ்நாட்டுக்கு குஸ்கா தான்,” என்று பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!