News February 15, 2025
முன்னாள் எம்.பிக்கு புகழஞ்சலி செலுத்திய அமைச்சர்

திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட அவைத்தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான வேணுகோபால் அவர்களின் நினைவிடத்தை மாண்புமிகு பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை துறை சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் திறந்து வைத்து முதலாம் ஆண்டு புகழஞ்சலி செலுத்தினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 1, 2025
திருப்பத்தூர்: ரயில் பயணிகளை குறிவைத்து திருடும் கும்பல்

ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையிடம் சில நாட்களுக்கு முன்பு ரயில் படியில் பயணம் செய்த வாலிபரை குச்சியால் அடித்து செல்போன் திருடியது குறித்து புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் நேற்று (அக்-31) ஆம்பூர் ரயில்நிலையத்தில் சோதனை செய்ததில், கந்திகொள்ளை பகுதியை சேர்ந்த பரமேஷ் (20) எனும் வாலிபர் திருடியது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்தனர்.
News November 1, 2025
திருப்பத்தூர் காவல்துறை எச்சரிக்கை..!

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு இணையதளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இணையதளத்தில் வரும் போலியான வாடிக்கையாளர் எண்களை நம்பி அவர்களிடம் பேசி உங்களது பணத்தை இழக்க வேண்டாம். வாடிக்கையாளர் எண்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்து பின் தொடர்பு கொண்டு பேசவும். இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளது.
News November 1, 2025
திருப்பத்தூர் இரவு ரோந்து பணியில் போலீஸ் பட்டியல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அக்.31 இரவு முதல் இன்று காலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன். வாணியம்பாடி சப் டிவிஷன் , திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் அவர்களின் செல்போன் எண்கள் பொது மக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் உள்ளது


