News March 19, 2025

முன்னாள் எம்பி உதவியாளர் கொலை செஞ்சியில் விசாரணை

image

செஞ்சி, மறைந்த முன்னாள் எம்.பி குப்புசாமியின் உதவியாளர் குமார் கொலை வழக்கில் தாம்பரம் காவல் உதவி ஆய்வாளர் நெல்சன் தலைமையில் செஞ்சி அடுத்த மேல் ஓலக்கூரில் ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையில் ரவி என்பவர் குமாரை கடத்தி வந்து கொலை செய்து மேல் ஒலக்கூரில் புதைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ரவியுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு, குமார் உடலைத் தோண்டி விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News

News March 20, 2025

விழுப்புரத்தில் 1000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (மார்ச்.21) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2மணி வரை நடைபெற உள்ளது. வயது: 18 – 35 வயது வரை. கல்வி தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, பொறியியல், ஐடிஐ, முடித்தவர்கள் பங்கேற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 04146 226417 மற்றும் 9499055906 என்ற தொலைபேசி எண்களில் அழைக்கவும். ஷேர் பண்ணுங்க

News March 20, 2025

திமுக பிரமுகர் சடலம் மீட்பு

image

திமுக முன்னாள் எம்பியின் உதவியாளர் குமார்(71) காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். சொத்திற்காக கொலை செய்து, செஞ்சி அருகே மேல்ஒலக்கூர் கிராமத்தில் புதைத்ததாக தாம்பரம் போலீசாரிடம் மூவரும் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில், இன்று(மார்ச்.21)செஞ்சி தாசில்தார் முன்னிலையில் குமாரின் சடலத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News March 20, 2025

திருடு போன ஆட்டோ ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்

image

விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாகர்ஷா தெருவை சேர்ந்தவர் முகமது யாசீர்(32). இவர் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு தொழுகைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்தபோது, ஆட்டோவை காணவில்லை. இதுகுறித்து புகாரின்பேரில் துரிதமாக செயல்பட்ட  போலீசார், ஒருமணி நேரத்தில் ஆட்டோவை கண்டுபிடித்தனர். துரிதமாக செயல்பட்ட போலீசாரை, காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

error: Content is protected !!