News April 16, 2024
முத்து மாரியம்மனுக்கு தங்க கவச அலங்காரம்

நாகப்பட்டினம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப் பொய்கை நல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மழை முத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார கிராமங்களை பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 24, 2025
நாகைக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன
News November 24, 2025
நாகை: நெற்பயிர்களை சூழ்ந்த மழைநீர்

கீழ்வேளூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கீழ்வேளூர், வடகரை, கோகூர், ஆணைமங்கலம். வங்காரமாவடி, ஒர்குடி, கடம்பன்குடி, பெருங்கடம்பனூர் உள்ளிட்ட சுற்றுபுற பகுதிகளில் உள்ள சம்பா தாளடி நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
News November 24, 2025
நாகை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை நிலவரம்

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அவ்வகையில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை நிலவரம்; நாகை 8.3 செமீ, திருப்பூண்டி 7.6 செமீ, வேளாங்கண்ணி 8.3 செமீ, திருக்குவளை – 9.6 செமீ, தலைஞாயிறு 9.9 செமீ (அதிகபட்சம்),வேதாரண்யம் 6.5 செமீ, கோடியக்கரை 6.0 செமீ.மொத்தமாக மாவட்டத்தில் 56.4 செமீ மழை பதிவாகி உள்ளது.


