News August 11, 2024
முத்துப்பேட்டை அருகே கொலை தொடர்பாக 3பேர் கைது

முத்துப்பேட்டை தாலுகா நடுவக்களப்பால் கடைவீதியில் நேற்று(ஆக.,10) மாரிமுத்து என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய:து. இந்நிலையில் நேற்று இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கோபிநாத்(21), வீரமணி(23), பிரேமா(46) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் விசாத்திதல் சம்பந்தப்பட்டு இருப்பதாக அறிந்து மூவரையும் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 4, 2025
திருவாரூர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

திருவாரூர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 4, 2025
திருவாரூர்: மழையால் பாதிக்கப்பட்ட இடத்தில் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சவளக்காரன் கிராமத்தில் டிட்வா புயல் காரணமாக, தொடர்ந்து பெய்த கனமழையின் காரணத்தினால் சவளக்காரன், மேலநாலாநல்லூர், கீழநாலாநல்லூர், அரசூர் உள்ளிட்ட கிராமங்களில் மழையில் இடிந்து விழுந்த வீடுகள் மற்றும் குடியிருப்புகளை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு கணக்கெடுப்பு செய்தனர்.
News December 4, 2025
திருவாரூர்: சிறப்பு குறை தீர்க்கும் முகாம் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் இன்று (4-12-2025) காலை 11 மணியளவில் திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான நலத்திட்ட உதவிகள், தேவை எனில் மனுக்களை இந்த முகாமில் தரலாம்.” என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


