News January 2, 2025
முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 145 வயது

முத்துநகர் விரைவு ரயில், கடத்த 1880ஆம் ஆண்டு ஜன.1ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல் பயணத்தில், சென்னை – தூத்துக்குடி இடையேயான 652 கி.மீ., தொலைவை ஆரம்ப காலக்கட்டத்தில் 21.50 மணி நேரத்தில் கடந்தது. முத்துநகர் விரைவு ரயில் 144ஆவது ஆண்டை நிறைவு செய்து, 145ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அப்போது கிட்டத்தட்ட 22 மணி நேரமாக கடந்த முத்துநகர் விரைவு ரயில், தற்போது 11 மணி நேரத்தில் சென்னையை சென்றடைகிறது.
Similar News
News November 20, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (நவ.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
இரவு நேர ரயில் சேவை; மீண்டும் தொடங்க கோரிக்கை

சென்னை புறநகர் பகுதிகளில், குறிப்பாக மேற்கு மற்றும் வடக்கு ரயில் பாதைகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட இரவு நேர ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ரத்து நடவடிக்கையால் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
News November 19, 2025
சென்னையில் 2 வாரங்களில் டிஜிட்டல் பஸ் பாஸ் அறிமுகம்

மாநகரப் பேருந்துகளுக்கான டிஜிட்டல் பாஸ் முறை இன்னும் 2 வாரங்களில் அறிமுகமாகிறது. ‘சென்னை ஒன்’ செயலி மூலம் பெறக்கூடிய இந்த பாஸ் ரூ.1000, 2000 என இரு விலைகளில் கிடைக்கும். இவை வாங்கிய நாளிலிருந்து 30 நாட்களுக்குச் செல்லும். பயணிகள் பேருந்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து பயணிக்க வேண்டும் என சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குடும்பம் (CUMTA) தெரிவித்துள்ளது.


