News January 2, 2025

முதுமலையில் தாயை இழந்த குட்டி யானைக்கு ஹீட்டர் வசதி

image

முதுமலைக்கு கொண்டு வரப்பட்ட தாயை இழந்த குட்டி யானைக்கு, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை மற்றும் பசிக்கும் நேரங்களில் ‘லாக்டோஜன்’ பால் பவுடர், குளுக்கோஸ், தண்ணீர் வழங்கி வருகின்றனர். தற்போது, குளிர்காலம் என்பதால், கராலினுள் ஹீட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. காலை,மாலை நேரத்தில் நடை பயிற்சி அளிக்கப்படுகிறது. குட்டி யானைக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, அதன் அருகே வெளி நபர்கள் அனுமதிப்பதில்லை.

Similar News

News October 18, 2025

நீலகிரி: தீபாவளிக்கு ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு!

image

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் பணிபுரிவோர். தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். அவ்வாறு பயணம் செய்வோர். குறைந்த கட்டணத்தில் பயணிக்க இங்கு<> கிளிக்<<>> செய்து அரசு பேருந்தில் உங்கள் பயணச்சீட்டை பதிவு செய்யுங்கள்! யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!

News October 18, 2025

நீலகிரி: கிராம ஊராட்சி செயலாளர் வேலை! அரிய வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!

News October 18, 2025

நீலகிரியில் வசமாக சிக்கிய நபர்: போலீஸ் அதிரடி

image

கூடலூர் அத்திப்பாளி பகுதியை சேர்ந்தவர் அனிபா. நள்ளிரவில் வீட்டுக்குள் சத்தம் கேட்டு அனிபா எழுந்தார். பின்னர் டார்ச் லைட் அடித்து பார்த்த போது, வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் வந்து நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சசமயம் வாலிபர் தப்பி ஓடினார். இது குறித்து அனிபா கூடலூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திருட முயன்ற அதே பகுதியை சேர்ந்த ஷெரீப் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!