News April 19, 2025
முதுநிலை நீட்தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்

மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் மூலம் நடைபெறும் முதுநிலை நீட் தேர்வு இந்த ஆண்டு ஜூன்.15-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு திருச்சி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தற்போது தொடங்கியுள்ளது. https://natboard.edu.in என்ற இணையதளத்தில் மே.7-ம் வரை விண்ணப்பிக்கலாம் மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 16, 2025
திருச்சி: மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலமாக மோசடி குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக OTP, கடவுச்சொல் ஆகியவற்றை யாரிடமும் பகிர வேண்டாம். செல்போனுக்கு வரும் சந்தேகத்திற்குரிய அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம். குறுஞ்செய்திகள் மூலமாகவோ, வாட்ஸ்ஆப் மூலமாக வரும் தெரியாத லிங்குகளை தொடவேண்டாம் என திருச்சி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News September 15, 2025
திருச்சி: கடன் தொல்லை நீக்கும் முருகன்

திருச்சி அருகே வயலூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும் ஆதி நாதியையும் முருகப் பெருமான் பூசிப்பது வயலூரின் தனிச் சிறப்பாகும். மேலும் அருணகிரிநாதர் பாடிய தலமாகவும், திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் இது விளங்குகிறது. இக்கோயிலில் முருகனை வழிபட்டால் கடன் தொல்லை, திருமண தடை உள்ளிட்டவை தீரும் என்பது நம்பிக்கை. பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 15, 2025
திருச்சி: கார்கள் நேருக்கு நேர் மோதல் – 6 பேர் படுகாயம்

திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுகமணி பேரூராட்சி அலுவலகம் அருகே, இன்று காலை 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரில் வந்த 5 பேர் படுகாயமடைந்து குளித்தலை மற்றும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அப்போது பேருந்துக்காக காத்திருந்த வசந்தா என்பவர் மீது கார் மோதியதில், அவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.