News November 23, 2024

முதியோர், குழந்தைகள் இல்லங்களுக்கு கலெக்டர் உத்தரவு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள், முதியோர், குழந்தைகள், மனவளர்ச்சி குன்றியோர், மாற்றுத் திறனாளிகள் இல்லங்கள் அரசால் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாத இல்லங்களுக்கு இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி பெறாத இல்லங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 28, 2025

கள அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் நாளை பிற்பகல் வரை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து கள அலுவலர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் யாரும் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2025

தூத்துக்குடி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இங்கு கிளிக்<<>> செய்து பணிகளை மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 28, 2025

தூத்துக்குடி: மகனுக்கு கத்திக்குத்து.. தந்தை கைது

image

தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் இசக்கி பாண்டி. இவரது மனைவி பரமேஸ்வரி குடும்ப தகராறில் கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் முத்தையாபுரத்தில் வசித்து வருகிறார். இசக்கி பாண்டி நேற்று முன்தினம் இரவு மனைவியுடன் தகராறு ஈடுபட்டு, மனைவியை கத்தியால் குத்த பயந்துள்ளார். அதனை தடுக்க முயன்ற அவரது மகன் சந்தோஷ் என்ற சிறுவன் காயமடைந்தான். இது சம்பந்தமாக, முத்தையாபுரம் போலீசார் இசக்கி பாண்டியை கைது செய்தனர்.

error: Content is protected !!