News April 26, 2025
முதியவரை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை

துரைப்பாண்டி(60), முத்துக்குமார்(60) இருவரும் கொரோனா காலத்தில் ராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலயத்தில் யாசகம் வாங்கி வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 2022ல், காசை பிரித்துக் கொள்வதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் துரைப்பாண்டி, பீர் பாட்டிலால் தாக்கியதில் முத்துக்குமார் உயிரிழந்தார். துரைப்பாண்டிக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
Similar News
News December 13, 2025
இலங்கை சிறையிலிருந்து தொண்டி மீனவர்கள் விடுதலை

தொண்டி அருகே நவ.,3 ல் நம்புதாளையைச் சேர்ந்த ரமேஷ் நாட்டுப்படகில் அதே கிராமத்தைச் சேர்ந்த மூவருடன் மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்த போது ரோந்து சென்ற இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்டனர். ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருந்த அவர்களை நேற்று நீதிமன்றம் விடுதலை செய்தது.4 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. படகும் விடுவிக்கப்பட்டது.
News December 13, 2025
ராமநாதபுரம்: Driving Licence-க்கு முக்கிய Update!

ராமநாதபுரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News December 13, 2025
பரமக்குடி: முதியவர்களை கொன்ற குற்றவாளிக்கு குண்டாஸ்

பரமக்குடி எமனேஸ்வரம் பகுதி வளையனேந்தல் கிராமம் வைகை ஆற்றுப்படுகையில் வேலுச்சாமி, லட்சுமணன் ஆகிய முதியவர்கள் மது அருந்தியதை கண்டித்த தகராறில் நவ., 17ல் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதில் அலெக்ஸ்பாண்டி 26, நவ.,18ல் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்ததால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.


