News August 17, 2024
முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் சார்பில், ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள வல்லம் படுகால் பகுதியில் ரூ.706 கோடியில் பாக்ஸ்கான் நிறுவனத்திற்காக 18,720 படுக்கைகள் கொண்ட தொழிற்சாலை பணியாளர்கள் தங்குவதற்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 20, 2025
காஞ்சிபுரம்: வேலை வேண்டுமா..? இங்க போங்க!

காஞ்சி: சென்னை, கிண்டி பெண்கள் ஐடிஐ வளாகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை(நவ.21) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமல் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய 9499966026 எனும் எண்ணை அழைக்கலாம் அல்லது <
News November 20, 2025
காஞ்சிபுரம்: மின் தாக்கி துடிதுடித்து பலி!

ஸ்ரீபெரும்புதூர்: உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் உதய்பான் போசாமி(45). லாரி கிளீனரான இவரும், டிரைவரும் பால்நல்லூரில் வல்லம் வடகால் சிப்காட் சாலையில் தொழிற்சாலைக்குச் செல்ல நேற்று(நவ.19) காலை காத்திருந்தனர். அப்போது, கீழே இறந்ங்கி கண்டெய்னரின் பின் பகுதியை உதய்பான் தொட்ட போது, திடீரென மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 19, 2025
காஞ்சி: மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி!

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி டிசம்பர் 01ஆம் தேதி அன்றும், தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி டிசம்பர் 4ஆம் தேதியன்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம், பி.டி.வி.எஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள இந்த போட்டியில், மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


