News August 24, 2024

முதல்வர் வரலாற்றை அழிக்க முயற்சிக்கிறார் -ஆர்.பி.உதயகுமார்

image

“கள்ளர் மறுசீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைத்து வரலாற்றை முதல்வர் ஸ்டாலின் அழிக்க முயற்சிக்கிறார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை செக்கனூரணியில் அதிமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பேசிய அவர், இந்த போராட்டம் வெறும் டிரைலர் தான், மெயின் பிக்சரை பார்த்தால் தமிழகத்தில் ஸ்டாலின் காணாமல் போவார்” என்று தெரிவித்தார்.

Similar News

News November 14, 2025

மதுரை: டூவீலர் மீது வேன் மோதி விபத்து; ஒருவர் பலி.!

image

திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியை சேர்த்த செல்வராஜ் மகன் கார்த்திக் 30. இவரும் இவரது நண்பர் தினேஷ்குமார் இருவரும் டூ வீலரில் பள்ளப்பட்டியில் இருந்து சோழவந்தான் நோக்கி வந்தனர். இடையில் கருப்பட்டி பிரிவு அருகே எதிரே வந்த ஈச்சர் வேன் இவர்கள் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பலியானார். தினேஷ்குமார் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

News November 14, 2025

மதுரையில் புதிய காவல் நிலையம்

image

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட,முக்கிய ஒரு கிராமமாக இருந்து வருவது தான் மாடக்குளம்.மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 71 வது வார்டாகிய இந்த பகுதியில்,பொன்மேனி, விராட்டிபத்து,கோச்சடை மற்றும் மாடக்குளம் ஆகிய பகுதிகளை அடக்கிய புதிய காவல் நிலையம் மாடக்குளம் பகுதியில் துவங்கப்பட்டுள்ளது.விரைவில் காவல்துறையினரின் அன்றாட பணிகள் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 14, 2025

மதுரையில் டெலிகாலர் வேலை

image

மதுரையில் ராஜா மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தில் டெலிகாலர் பணியிடத்திற்கு பல்வேறு காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டள்ளது. இந்த பணியிடத்திற்கு 10ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படித்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.10,000 மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும். வேலைக்கு விண்ணப்பிப்போர் இங்கு <>க்ளிக் <<>>செய்து இந்த மாதம் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!