News November 11, 2024
முதல்வர் மருந்தகத்திற்கு விண்ணப்பிக்கலாம்
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm மற்றும் D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் நவம்பர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும்.
Similar News
News November 19, 2024
சேலம்: இன்றைய தலைப்பு செய்திகள்
➤சேலம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ➤ரேஷன் கடை வேலைக்கு நேர்முகத் தேர்வு ➤அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு: சாலை மறியல் ➤வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் ➤மேலும் ஒரு மாவட்ட செயலாளர் பதவி விலகல் ➤ உடற்பயிற்சியின் போது ஜிம்மிலேயே உயிரிழந்த நபர் ➤சேலத்திற்கு வருகை தரும் அமைச்சர் ➤தொழில் முனைவோருக்கு அரிய வாய்ப்பு ➤சேலம் எனப் பெயர் வந்தது எப்படி?.
News November 19, 2024
சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு
இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை வழியாக கோவையில் இருந்து பீகார் மாநிலம் ப்ரௌனிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (03358), இன்று (நவ.20) நள்ளிரவு 12.50 மணிக்கு பதிலாக சுமார் 5 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக, அதிகாலை 06.00 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
News November 19, 2024
ரேஷன் கடை வேலைக்கு நேர்முக தேர்வு
சேலம் கூட்டுறவுச் சங்கங்களில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் நவ.28 முதல் டிச.7 வரையும், கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நவ.7 முதல் நவ.9 வரையும் நடக்கிறது. இந்த நேர்முகத் தேர்வானது, சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய நலக்கூடத்தில் நடக்கிறது.