News September 14, 2024
முதல்வரை வரவேற்க உள்ள அமைச்சர்

முதலீட்டாளர்கள் சந்திப்பை முடித்துவிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று இந்தியா திரும்புகிறார். இந்நிலையில், அவரை வரவேற்கும் விதமாக இன்று காலை 7 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட உள்ளது. இதில், பல்வேறு துறையினர் மற்றும் திமுகவினர் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News November 16, 2025
காஞ்சி: கடன் பிரச்னை; கொள்ளையனாக மாறிய வாலிபர்!

குன்றத்தூர், இரண்டாம் கட்டளை கஜலட்சுமி நகரை சேர்ந்தவ கௌசல்யா (70) இரண்டு நாட்களுக்கு முன் நடைபயிற்சி சென்றார். அப்போது இவரிடம் வழி கேட்பது போல நடித்து, 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து விசாரித்த போலீசார் படப்பையை சேர்ந்த பிரதீப்பை (31) கைது செய்தனர். அவருக்கு கடன் பிரச்னை அதிகமானதால் இவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும், இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
News November 16, 2025
காஞ்சியில் கனமழை வெளுக்கும்!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நாளை (நவ.17) & நவ.18ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட, மாவட்ட ஆட்சியருக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணி அலெர்ட் பண்ணுங்க.
News November 16, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (நவம்பர். 15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


