News February 16, 2025
முதல்வரின் காக்கும் கரங்கள் கலெக்டர் தகவல்

முன்னாள் படைவீரர்களின் நலனுக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் வருகிற பிப்ரவரி 20-ம் தேதி மாலை 3 மணியளவில் முகாம் நடைபெறவுள்ளது. எனவே இதில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 22, 2025
வேலூர் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்வு கூட்டம்

தென்பிராந்திய ராணுவ தலைமையகம் சார்பில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு கூட்டம் நாளை டிசம்பர் 23-ம் தேதி காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இதில் ராணுவ அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
News December 22, 2025
வேலூர்: 8ஆவது படித்தால் ரூ.62,000 சம்பளத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.19,500 – Rs.62,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 22, 2025
வேலூர் எஸ்ஐ தேர்வு ; 1280 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்துத் தேர்வு, வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் நேற்று(டிச.21) நடந்தது. இந்தத் தேர்வினை 4726 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 3,446 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வுக்கு விண்ணப்பித்த 1,280 பேர் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


