News September 13, 2024
முதல்வன் பட பாணியில் புதுக்கோட்டை எம்.எல். ஏ.

புதுக்கோட்டை மாநகரில் எம்எல்ஏ முத்துராஜா மூன்று வார்டுகளில் நேற்று ஆய்வு செய்தார். அவர் வீடு வீடாக சென்று மக்களிடம் குறைகளை கண்டறிந்தார். இந்த காட்சியை பார்க்கிற பொழுது முதல் படத்தில் அர்ஜுன் எப்படி செயல்படுகின்றார். அதேபோல் இவரும் செயல்படுகிறார் என மகிழ்ச்சியும் தெரிவித்தனர். மேலும் முத்துராஜா முதலமைச்சர் ஸ்டாலினை போல் துள்ளியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Similar News
News November 26, 2025
புதுவை: மக்கள் தொடர்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

ஆலங்குடி தாலுகா குழந்தை விநாயகர் வருவாய் கிராமத்தில் வருகிற டிச.10 ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் இன்று முதல் தங்களது கோரிக்கை மனுக்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
புதுக்கோட்டை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுக்கோட்டை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
புதுகை: சரக்கு வாகனத்தில் கார் மோதி விபத்து – ஒருவர் பலி

தஞ்சாவூரில் இருந்து கந்தர்வகோட்டைக்கு நேற்று சரக்கு வாகனத்தில் திருநாவுக்கரசு(49) என்பவர் சென்றுள்ளார். அப்போது புனல் குளம் மளிகை கடை அருகே, கார் ஓட்டி வந்த அப்துல் முனப்(44) என்பவர், சரக்கு வாகனத்தில் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த முகமது ஜாபர்(44) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருநாவுக்கரசு அளித்த புகாரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


