News May 16, 2024
முதலை கடித்து பராமரிப்பாளர் காயம்

வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி ஐந்து வருடங்களாக தற்காலிக பணி செய்பவர் விஜய் (23). மூன்று மாதங்களாக சதுப்புநீர் முதலை பண்ணையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டவரை இன்று முதலை ஒன்று கடித்தது. இதில் பலத்த காயமடைந்த விஜய் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஜயின் தந்தை ஏசு நெருப்பு கோழி பராமரிப்பில் நிரந்தர பணியாளராக வேலை பார்கிறார்.
Similar News
News December 24, 2025
செங்கை மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை

டிசம்பர் 24/12/2025 முதல் ஜனவரி 04/01/2026 வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 05/01/2006 அன்று வழக்கம் போல் பள்ளி நடைபெறும். இதில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் கூறியுள்ளார். மாணவர்களும் தேவையற்ற செயல்களில் ஈடுபடாமல் உபயோகமான செயல்களை செய்து கொள்ளவும் என கூறுகின்றனர்.
News December 24, 2025
செங்கல்பட்டு: ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையம் (GDP) ஹாலில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள், வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம், பொதுமக்கள் நலத்திட்டங்களின் பயனாளிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்.
News December 24, 2025
செங்கல்பட்டு: கடற்கரையில் கிடந்த ஆண் சடலம்!

கோவளம் கடற்கரையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. தகவலறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவர் கடலில் மூழ்கி இறந்தாரா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


