News April 13, 2025
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது – ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய 15 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் 3 பெண்களுக்கு வழங்கப்படும். ரூ.1 லட்சமும், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கமும் வழங்கப்படும். இதற்கு, அதிகாரப்பூர்வ இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 31, 2025
அரியலூர்: ரோந்து காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை பிடிப்பதற்கும், தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படி (அக்.30) இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்களை வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும். இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!
News October 30, 2025
அரியலூர்: 4,645 யூனிட்ஸ் இரத்தம் சேகரிப்பு

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இரத்த மையத்தில், கடந்த ஆண்டு 4,645 யூனிட்ஸ் இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. அதனைக்கொண்டு 7,000 மேற்பட்ட இரத்தம் மற்றும் இரத்த கூறுகள் மருத்துவமனை உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள், எலும்பு அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
அரியலூர்: ஆட்டோ வாங்க 3 லட்சம் கடன் உதவி

அரியலூர் மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.


