News August 22, 2024

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி அறிவிப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் விருதுநகர் மாவட்டம் சார்பாக 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்களில் 53 வகைகளில் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளோர் https://sdat.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News December 8, 2025

விருதுநகரில் டைடல் நியோ பூங்கா – ஸ்டாலின் அறிவிப்பு

image

மதுரையில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில், மதுரை மாவட்டத்தில் ரூ.314 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதே போல் சிவகங்கை மாவட்டத்திலும் டைடல் நியோ பூங்கா நிறுவப்பட்டு வரும் நிலையில் விருதுநகர், நெல்லை மற்றும் குமரி ஆகிய தென்மாவட்டங்களிலும் டைடல் நியோ பூங்காக்கள் நிறுவ திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.

News December 8, 2025

விருதுநகர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

விருதுநகர் மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE

News December 8, 2025

விருதுநகர்: வீட்டில் கரண்ட் இல்லையா? இத பண்ணுங்க.!

image

விருதுநகர் மக்களே, மழை நேரங்களில் அடிக்கடி வீட்டில் கரண்ட் கட் ஏற்படுகிறதா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். கால் செய்து புகாரளிக்க, 9498794987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!