News December 31, 2024
முதலமைச்சரை இந்தியாவே இன்று திரும்பி பார்க்கிறது

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா இரண்டாம் நாள் விழா இன்று(டிச.31) நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார் அப்போது வள்ளுவர் புரட்சி செய்தவர், அரசர்களுக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த பேராசான் அந்த வழியில் இன்று தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியாவே அவரை திரும்பி பார்க்கிறது என்று புகழாரம் சூட்டினார்.
Similar News
News December 19, 2025
குமரியில் அதிமுக கவுன்சிலர் கைது!

கடையாலுமூடு அருகே களியலில் அனுமதியின்றி இயங்கிய குவாரியில் நேற்று முன் தினம் மாவட்ட SP ஸ்டாலின் சோதனை மேற்கொண்டார். அங்கு பணியில் இருந்த கடையாலுமூடு அதிமுக கவுன்சிலர் ஸ்டாலின் (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து நில உரிமையாளர், குவாரி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், குவாரி செயல்பட உடந்தையாக இருந்த கடையாலுமூடு போலீசார் 2 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
News December 19, 2025
குமரி: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் <
News December 19, 2025
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி

குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஓவியப்போட்டி குமரி மாவட்ட காவல்துறை சார்பில் நடத்தப்படுகிறது. ரூ.15000, ரூ.10000, ரூ7500 என பரிசுகள் வழங்கப்படுகிறது. ஓவியத்தை ஜன.5.ம் தேதிக்குள் நாகர்கோவில், குமரி, தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல் ஆகிய போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கலாம் என குமரி மாவட்ட எஸ்.பி தகவல் தொிவித்துள்ளார்.


