News August 26, 2024

முதலமைச்சருக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் வாழ்த்து

image

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். உடன் தலைமைச் செயலக அதிகாரிகள் இருந்தனர்.

Similar News

News September 19, 2025

சென்னை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

சென்னை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

ALERT: சென்னையில் இன்று மழை வெளுக்கும்

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 21ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. எனவே வெளியே செல்வோர் முன்னெச்சரிக்கையா இருங்க.

News September 19, 2025

சென்னை மக்களே குடிநீர் வரவில்லையா?

image

சென்னை மக்களே உங்கள் தெருக்களில் குடிநீர் வரவில்லை அல்லது கழிவுநீர் தேங்கி உள்ளதா? இனி கவலை வேண்டாம். குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றம் சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளை பகிர 044-4567 4567 என்ற தொலைபேசி எண்ணை chennai metro water அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அல்லது toll-free 1916 எண் மூலம் உடனே தொடர்பு கொள்ளலாம். *இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!