News February 17, 2025
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்கப்பட்டது

தஞ்சாவூர் மாவட்ட அலுவலகக் கூட்டரங்கில் இன்று (17.02.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவியாக ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையினை நிலகிரி தெற்கு தோட்டம் கிராமத்தினை சேர்ந்த செல்வன் பிரகதீஸ்வரன் என்பவர் கல்லணை கால்வாய் புது ஆற்றில் மூழ்கி இறந்ததால் நிதி உதவியை அவரது தந்தையிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
Similar News
News December 18, 2025
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் 100 நபர்களுக்கு பசுமை முதன்மையாளர்கள் விருது (2025-2026) மற்றும் தலா ரூ.1 இலட்சம் வழங்கப்படுகிறது. விருது பெற விரும்புவோர் (www.tnpcb.gov.in) என்ற இணையதளத்தில் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
பட்டுக்கோட்டை நிதி நிறுவனத்தில் ரூ. 1 லட்சம் திருட்டு

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை புது உடையார் தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தேரடி தெருவில் உள்ள வணிக வளாகத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று காலை அலுவலகத்தை திறக்கச் சென்றபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
அலுவலகத்துக்குள் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ₹1 லட்சம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 18, 2025
தஞ்சை: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை 19/ 12/ 2025 காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. தகுதியான இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க


