News August 6, 2024
முதன்மை செயலாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ் குமார் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் மாவட்ட திட்ட முகம் இயக்குனர் உமா மகேஸ்வரி அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில் மாவட்டத்தில் செயல்பட்ட வரும் அரசு திட்ட பணிகள் குறித்தும் நிலுவையில் உள்ள திட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்கள்.
Similar News
News September 18, 2025
திருப்பத்தூரில் இன்று மழை வெளுக்கும்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையா இருங்க. ஷேர் பண்ணுங்க.
News September 18, 2025
திருப்பத்தூர்: பட்டாவில் திருத்தம் செய்யனுமா? செம்ம ஈஸி!

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News September 18, 2025
திருப்பத்தூர்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில், இன்று (செப்.18) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் சப்-டிவிஷன்களில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளும், இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவைப்பட்டால், பொதுமக்கள் இந்த எண்களைத் தொடர்புக்கொள்ளலாம்