News April 24, 2025

முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (24-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.05 காசுகளாக நீடித்து வருகிறது. நேற்று முன் தினம் (ஏப்ரல் 22) முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.05 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.

Similar News

News April 25, 2025

உதவி லோகோ பைலட் பணி; உடனே விண்ணப்பியுங்கள்

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 காலிபணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும் . இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை <>rrbchennai.gov.in <<>>என்ற ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.

News April 24, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (24/04/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – சங்கர பாண்டியன் (9655230300), திருச்செங்கோடு – தவமணி (9443656999) ,வேலூர் – சவிதா (8072913717) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News April 24, 2025

நாமக்கல் மக்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாளை ஏப்.25ஆம் தேதி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், காலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், அதனை தொடர்ந்து கேஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு திரளான விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். SHARE பண்ணுங்க

error: Content is protected !!