News April 11, 2025
முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை!

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (11-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.
Similar News
News November 26, 2025
நாமக்கல்: புதிய வாகனம் வாங்க சூப்பர் அறிவிப்பு!

மத்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3 சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <
News November 26, 2025
நாமக்கல்: SIR படிவங்களை ரேஷன் கடைகளில் வழங்கலாம்!

வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட SIR படிவங்களை பூர்த்தி செய்து மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திருப்பி ஒப்படைக்க வசதியாக 25.11.2025 முதல் அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள்(ம)அனைத்து அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகள்(ம) அனைத்து நியாய விலைக்கடைகள் ஆகியவற்றில் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பூர்த்தி செய்யப்பட்ட தங்களது SIR படிவங்களை ஒப்படைக்கலாம்.
News November 26, 2025
முன்னாள் படைவீரர்களின் குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட முன்னாள் படை வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் விதவைகள், படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நவ.27 நாளை பிற்பகல் 3.30 மணி அளவில் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர், படைவீரர்களின் குடும்பத்தார், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைளை தெரிவிக்கலாம்.


