News August 7, 2024

முசிறி அருகே பாலப்பட்டியில் விவசாயி வெட்டிக்கொலை

image

திருச்சி மாவட்டம் முசிறி அருகே பாலப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (55). இதே ஊரை சேர்ந்தவர் அழகேசன் (50) இருவரும் ஒரே கேணியில் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இது சம்பந்தமாக இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது நிலையில் பழனிச்சாமியின் மரத்தை அழகேசன் வெட்டியதாகவும் அது குறித்து கேட்டதற்கு அழகேசன் மற்றும் அவரது தந்தை உத்தண்டன் இருவரும் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

Similar News

News November 15, 2025

திருச்சி: 21 லட்சம் படிவங்கள் விநியோகம்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று (நவ.14) மாலை வரை 21,09,778 எண்ணிக்கையிலான வாக்காளர்களுக்கு முன் நிரப்பப்பட்ட படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு, படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர்களிடமிருந்து பெறும் பணி நடைபெற்று வருவதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

திருச்சி: நகைகளை திருடிய ஓட்டுனர்

image

திருச்சி, கீழ வாளாடியைச் சேர்ந்த சிந்துஜா என்பவரது வீட்டில் ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் பிரபாகரன். இந்நிலையில் சிந்துஜா தனது வீட்டில் தங்க நகை காணாமல் போனதை கண்டுபிடித்துள்ளார். பின்னர் அவர் லால்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்தபோது ஓட்டுநர் பிரபாகரன் நகைகளை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் பிரபாகரனை கைது செய்து நகைகளை மீட்டனர்.

News November 15, 2025

திருச்சி: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு & 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து நாளை நவ.16-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசு வேலை தேடும் அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!