News April 16, 2025
மீன் பிடிக்க சென்ற வாலிபர் சடலமாக மீட்பு

கொங்கவேம்பு அருகே உள்ள வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 35). இவர் நேற்று மது போதையில் அங்குள்ள கிணற்றில் இறங்கி மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது மது போதையில் தவறுதலாக கிணற்றில் விழூந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அரூர் தீயணைப்புத் துறையினர் கோவிந்தசாமியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 3, 2025
தருமபுரி: தினம் தினம் வீட்டில் சண்டை; +1 மாணவன் தற்கொலை!

ஏ.ஜெட்.டி.அள்ளி எர்ரப்பட்டியைச் சேர்ந்த +1 மாணவன் ஹரீஷ் (15), நேற்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். தந்தையின் மதுப் பழக்கத்தினால் தாயுடன் ஏற்பட்ட சண்டையே அவரது மனவேதனைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்கொலைக்கு முன் நண்பர்களுக்கு இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தருமபுரி: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

தருமபுரி மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து பணிகள் நேற்று (டிச.02) மாவட்டம் முழுவதும் பல நிலையங்களில் ஒழுங்காக நடத்தப்பட்டது. மாவட்ட இரவு ரோந்து அலுவலர் டிஎஸ்பி எம்.ரவிச்சந்திரன் தலைமையில் தருமபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு உட்பட அனைத்து பிரிவுகளிலும் எஸ்ஐ/ எஸ்எஸ்ஐ அதிகாரிகள் கண்காணிப்பில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். அவசர உதவிக்கு தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்!