News April 9, 2024
மீன்பிடி தடைக்காலம் வரும் ஏப்.15ல் தொடக்கம்

புதுச்சேரி மீன்வளத்துறை சார்பு செயலர் புனிதமேரி வெளியிட்ட உத்தரவில், இந்திய அரசின் மீன்வள அமைச்சகத்தின் துணை ஆணையர் உத்தரவுப்படி மீன்வளத்தை பாதுகாத்திட கடந்த ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தியது போல், வரும் ஏப்ரல். 15 ஆம் தேதி முதல் ஜூன்.14 ஆம் தேதி வரை 61 நாட்கள் புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
புதுவை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 3, 2026
புதுவை அரசுக்கு – நாஜிம் வேண்டுகோள்

காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A.M.H. நாஜிம், புதுவை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, தேர்வு செய்யப்பட்ட 192 ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு, (PST) தேர்தல் நடத்தை விதி (MCC) நெருங்கி வருவதால், தேர்தல் கமிஷன் நடத்தை விதியை அறிவிப்பதற்கு முன்பாக, உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்று இவ்வாறு கோரியுள்ளார்.
News March 3, 2026
புதுச்சேரி: காங்கிரஸ் தேர்தல் ஆலோசனை கூட்டம்

வருகின்ற 2026 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஊடக மற்றும் விளம்பரக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளருமான டாக்டர் அஞ்சலி நிம்பால்கர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.


