News April 12, 2025
மீன்பிடித் தடைக்காலம் ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மயிலாடுதுறையில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மின்பிடித் தடைக்காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மீன்பிடி தடைக்காலத்திற்கு முன் கடலுக்கு சென்ற மீனவர்கள் ஏப்.14 இரவு 12 மணிக்குள் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)
Similar News
News December 17, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட தில்லையாடி கிராமத்தில் பனை விதைகள் நடும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News December 17, 2025
மயிலாடுதுறை: தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கங்காதரபுரம் கிராமத்தில் ஜெயசீலன் என்பவரது வீடு நேற்று எதிர்பாராத தீ விபத்தால் முழுவதும் எரிந்து சேதமானது. இந்த நிலையில் இன்று தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற பூம்புகார் முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.
News December 17, 2025
மயிலாடுதுறை: கரண்ட் இல்லையா? கவலை வேண்டாம்!

மயிலாடுதுறை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் இரவு நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 15 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


