News April 16, 2024
மீனாட்சி திருக்கல்யாணம் 9370 பேர் விண்ணப்பம்

மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வு வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. மீனாட்சி திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குப்பட்டது. ரூ.500 டிக்கெட்டில் 6372 பேரும், ரூ.200 டிக்கெட்டில் 2998 பேர் என மொத்தம் 9370 பேர் முன்பதிவு செய்திருந்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று முதல் டிக்கெட் வழங்கும் பணி துவங்கியது.
Similar News
News December 12, 2025
மதுரை: சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் பரிதாப பலி

மதுரை உசிலம்பட்டி அருகே எழுமலையைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் செல்வபாண்டி, விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில், நேற்று (டிச. 11) மாலை மைத்துனர் அருண்குமாருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, முத்துராமலிங்க தேவர் கல்லூரி அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உசிலம்பட்டி போலீசார் தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
News December 12, 2025
மதுரை: ரேஷன் கார்டு இருக்கா…. முக்கிய அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறித்த மக்கள் குறைதீர் முகாம் நாளை (13.12.25) நடக்கிறது. குடிமை பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில், நாளை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும்.இம்முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர்,முகவரி திருத்தம், போன்றவை குறித்து மனுக்கள் அளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 12, 2025
மதுரையில் டூவீலர் மோதி ஆந்திரா ஐயப்ப பக்தர் பலி

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கவினி வெங்கட்ராவ்(48 ) சக பக்தர்களுடன் ஆந்திராவில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு தனியார் பேருந்தில் சென்றார். பின் இன்று மதுரை வந்த அவர்கள் சிலைமானில் பஸ்சை நிறுத்திய போது, அவர் சாலையை கடந்த போது சிவகங்கை புவனேஸ்வரன்(30) ஓட்டி வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் கவினி வெங்கட்ராவ் உயிரிழந்தார். சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.


